நடிகை சாய் பல்லவியின் கல்லூரி படிக்கும்போது, கத்ரீனா கைஃஃப்-ன் ஹிட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’-க்கு கலக்கல் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் தனது குறிப்பிடத்தக்க நடனத் திறமையை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி அட்டகாசமான நடிப்புக்கு பெயர் பெற்றவர், ‘ரவுடி பேபி’ பாடலில் அவரது மாஸ் நடனத்தை யாராலும் மறக்க முடியாது. சமீபத்தில், சாய் பல்லவி அவருடைய கல்லூரி நாட்களில், கத்ரீனா கைஃபின் ஹிட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு அழகாக நடனம் ஆடிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவில், சாய் பல்லவி பெர்ஃபார்மன்ஸில் கலக்குகிறார். கூட்டத்தால் உற்சாகப்படுத்தப்பட்ட கத்ரீனா கைஃபின் அழகான டான்ஸ் மூவ்மெண்ட்களை சிரமமில்லாமல் போடுகிறார். பின்னர், அவர் தனது வகுப்பு தோழி மற்றும் தோழர்களுடன் சேர்ந்து, மின்னல் அடித்தது போன்ற பெர்ஃபார்மன்சைக் காட்டுகிறார்.
முந்தைய நேர்காணலில், சாய் பல்லவி தனது நடன திறமையின் மீது தனது தாயின் அசைக்க முடியாத நம்பிக்கையை நினைவுபடுத்தினார். அதைப் பற்றி கூறியதாவது: “நான் அவள் வயிற்றில் இருந்தபோது, நான் நிறைய நடனமாடினேன் என்று அவள் நம்பினாள், பல்லவி மேலும் கூறினார், அவர் நடனமாடியவர் அல்ல, அவர் வீணை வாசித்தார். எனவே எனது முந்தைய வாழ்க்கையில் நான் ஒரு நடனக் கலைஞராக இருந்திருக்கலாம் என்று அவள் என்னிடம் சொன்னாள். அவர் கர்ப்பமாக இருந்தபோது, நான் நடனமாட ஆரம்பித்தேன்.” என்று கூறினார்.
நடிகை சாய் பல்லவி தனது தாயின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் கலைநிகழ்ச்சிகளில் இறங்கினார். சாய் பல்லவி கூறுகையில், “அவர் (பல்லவியின் தாய்) என்னை மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் வீடியோக்களைப் பார்க்க வைக்கத் தொடங்கினார், மேலும், நான் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன், காலப்போக்கில் அது எனக்கு நிறைய ஆறுதலைத் தந்தது. ஒவ்வொரு முறையும் நான் நடனமாடி, போட்டியில் வெற்றிபெறும் ஒவ்வொரு முறையும் அம்மா, அப்பாவிடம் இருந்து நிறைய ஆதரவு பெற்றேன். நான் ‘சரியாக இருக்கிறேன், நான் இதில் நன்றாக இருக்கிறேன், எனவே இதைச் செய்யத் தொடங்குகிறேன்.” என்று கூறினார்.
ரித்தேஷ் திவாரியின் ராமாயணத்தில் சாய் பல்லவி தல தேவதையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது. அமீர் கானின் மகன் ஜுனைத் கானுடன் அவரது முதல் படத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி தமிழில் நடிக்கும் அமரன் படமும் தயாராக உள்ளது.
+ There are no comments
Add yours