நடிகை சமந்தா தசை அழற்சி என்ற அரியவகை பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார். இந்தப் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்திருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே, உடல் ஆரோக்கியம் குறித்து, பாட்காஸ்டில் தன் நண்பருடன் அவர் பேசி வருகிறார். அதில் தசை அழற்சி காரணமாக சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தசை அழற்சி நோய் காரணமாகப் படப்பிடிப்பு கடினமாக இருந்தது. குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. ஆக்ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours