நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் வெங்கல்ராவ். சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றியவர் பின்பு நகைச்சுவை நடிகராக மாறினார். ’தலைநகரம்’, ‘எம்டன் மகன்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர், கடந்த 2022ல் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் நேற்று வீடியோ ஒன்றில் உருக்கமாகப் பேசி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி கேள்விப்பட்ட நடிகர் சிம்பு வெங்கல்ராவின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார். சிம்புவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றிருக்கிறது.
+ There are no comments
Add yours