நடிகை கவுதமியிடம் நடிகர் ரஜினிகாந்த் குறும்பு செய்ய, கவுதமி வெட்கத்தில் இருக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எந்த படத்திற்கான காட்சிகள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் அபூர்வராகங்கள் தொடங்கி, தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினியிகாந்த் 70 வயதை கடந்த பின்னும் இன்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக இருக்கும் நிலையில், தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து முன்னணி இளம் இயக்குனர்களில் படங்களில் நடிக்க உள்ள ரஜினிகாந்த், பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது ரஜினிகாந்த் நடிப்பில வெளியான பழைய படங்களின் காட்சிகள், பழைய பேட்டிகள் என பல வீடியோக்கள் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் கவுதமியிடம் குறும்பு செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த கவுதமி, 1988-ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த், பிரபு சீதா ஆகியோர் நடித்த இந்த படத்தின் தொடக்க விழா மற்றும் முதல் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். இதில் வினுசக்ரவர்த்தி வீட்டில், நடிகர் ரஜினிகாந்த் கவுதமியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது தொடர்பான வீடியோ இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ பதில், சத்யராஜ் நடிப்பில் வெளியான தாய்நாடு, அர்ஜூன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சில படங்களின் தொடக்க விழா காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
+ There are no comments
Add yours