‘கொஞ்சம் வெயிட் போடுங்க சமந்தா..ப்ளீஸ்’- கோரிக்கை வைத்த ரசிகர் !

Spread the love

எடை குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு சமந்தா பதிலடிக் கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சமந்தா. அப்போது ரசிகர் ஒருவர் “தயவு செய்து கொஞ்சம் எடை அதிகரியுங்கள் மேடம்” என்று கேள்வி ஒன்றை எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா, “இன்னொரு எடை குறித்த கமெண்ட். என்னுடைய எடை குறித்து ஒரு முழு த்ரெட் பதிவையே நான் பார்த்தேன். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் ஒரு கடுமையான அழற்சி எதிர்ப்பு டயட் முறையை பின்பற்றுகிறேன்.

அது என்னுடைய உடல்நிலைக்கு தேவைப்படுகிறது. அது எடை போடுவதிலிருந்து தடுத்து, குறிப்பிட்ட எடை அளவுக்குள் வைத்திருக்கிறது. மேலும் என்னுடைய மயாசிடிஸ் நிலைக்கு ஒரு சரியான விதத்தில் என்னை வைத்திருக்கிறது. அவற்றை அப்படியே விடுங்கள். வாழுங்கள், வாழவிடுங்கள். ப்ளீஸ் நண்பர்களே, இது 2024” என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 7-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கி இருக்கிறார்கள். வருண் தவான், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours