நடிகர் தனுஷ் இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.
இந்த படம் வெளியான போது சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் படத்தில் நடித்து வரும் அவர்; தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார்.
நடிகர் தனுஷ் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் கஸ்தூரி ராஜாவின் மகன்.
இதுவரை அவர் 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைத்தது.
தனுஷின் கடைசி திரைப்படமான கேப்டன் மில்லர் வெளியான நிலையில் , இந்த படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.
தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லாவுடன் ஒரு படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார்.
முதல் படத்திலேயே பல விமர்சனங்களுக்கு உள்ளான இவர், தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.
இதற்கிடையே நடிகராக மட்டுமல்லாது பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ,இத்திரைப்படமானது வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் பெயரும், முதல்பார்வை பதாகையும் வெளியிடப்பட்டன. படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதாகையில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு துரிதஉணவு கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள்.
தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகளாக நடித்திருக்கிறார்கள்.
துரிதஉணவு கடை நடத்திவரும் அவர்கள் எப்படி gangstar ஆனார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. அஜித்துக்காக செல்வராகவன் இந்த படத்தின் கதையை எழுதியது என்றும், இந்த படத்தை தனுஷ் இயக்குகிறார் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் அதனை மறுத்த செல்வராகவன், ராயன் கதை தனுஷுடையதுதான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிப்பில் முழு கவனம் செலுத்தும் தனுஷ் தனது 50ஆவது படம் மட்டுமின்றி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்.
அந்தப் படத்துக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக தனுஷின் உறவினர் வருண் என்பவரும், ஹீரோயினாக அனிகாவும் நடிக்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று இப்படத்திலிருந்து பதாகை ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
+ There are no comments
Add yours