நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 4 வாரங்கள் ஆகியும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காதல் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 10 கோடிகள் வரை வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான பீல்குட் படங்களின் லிஸ்டில் இந்த திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சின்னத்திரை நடிகர் ரியோவுக்கும் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாகவே படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பிரமாண்ட விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, தற்போது ஜோ படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜோ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திரையரங்குகளில் படம் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.
+ There are no comments
Add yours