சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா.!

Spread the love

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் மூலமாக புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும்” எனக் குறிபிட்டுள்ளார்.

அவரது இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்த சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.

வேற எந்தவித படங்களிலும் கமிட்டாகமல் இருந்து வரும் சமந்தாவுக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்கமால் தான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தது விட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இது பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பிரபல எம் டிவியின் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்ற இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

உண்மையிலேயே அவருக்கு படம் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் இதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாரா? இல்லையென்றால், பிரபலம் ஆக்குவதற்காக முதலில் விளம்பரம் செய்வதற்காக செய்கிறாரா என்று தெரியவில்லை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours