இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு பேனரைத் தொடங்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் மோசட் வான்டட் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடைசியாக விஜய்யை வைத்து ‘லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான வெளியான அறிக்கையில், “5 படங்களை இயக்கிய பிறகு, கதை சொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்வதில் அர்ப்பணிக்கப்பட்ட எனது தயாரிப்பு முயற்சியான ஜி ஸ்குவாட் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கவும், நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை நீங்கள் அனைவரும் பார்த்து, ரசித்து, பொழிய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். அமைதியாக இருங்கள் மற்றும் எங்கள் முதல் தயாரிப்பு முயற்சியின் அப்டேட்டுக்காக காத்திருங்கள்” என்று லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்கத்திலிருந்து தயாரிப்பு அவதாரத்தில் களமிறங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் லோகவாக இருக்கும் தேள் படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகாவாக பயன்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
+ There are no comments
Add yours