விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர் அடுத்ததாக தன்னுடைய 68 -வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக “தளபதி 68” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மங்காத்தா, மாநாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார்.
இவர் விஜய்யை வைத்து இயக்கவுள்ள அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்றது. விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாவதால் தளபதி 68 படத்தின் அப்டேட் தாமதமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், பூஜையில் கலந்து கொண்ட சிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை கசியவிட்ட காரணத்தால் பலருக்கும் தகவல் தெரிந்தது. அதன்படி, இந்த திரைப்படத்தில் லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந், மைக் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.
25 வயது இளைஞனாக நடிகர் விஜய்? VFX-க்கும் மட்டும் ‘தளபதி 68’ படக்குழு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவிருப்பதாக முன்னதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே, இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதைப்போல மெர்சல் படத்திலும் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருந்தார். எனவே, கண்டிப்பாக விஜய்க்கு வில்லனாக அவர் தளபதி 68 படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம்.
கோலிவுட் சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, கேம்ஜெஞ்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அவர் விஜய்க்கு வில்லனாக தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
+ There are no comments
Add yours