அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி!

Spread the love

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் அன்பானந்தன். இவர் அப்பகுதியில் பிரபலமான ஜோதிடர். இவரிடம் ஈரோடு மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஜோதிடம் பார்க்கப் பலர் வருகின்றனர். இப்படி இவரிடம் ஜோதிடம் பார்க்க சென்ற செங்குத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி- சண்முகசுந்தரம் தம்பதியினர் நாளடைவில் குடும்ப நண்பர்களாக பழகியுள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அன்பானந்தன், சண்முகத்திரத்தின் மகனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பிய சண்முக சுந்தரம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் வாங்கிய பிறகு சைலண்ட் ஆன அன்பானந்தன், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகசுந்தரம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அன்பானந்தன் மீது ஏற்கெனவே இரண்டு மோசடி புகார்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஈரோடு, ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த பூவழகன் என்பவர் அன்பானந்தன் மீது மோசடி புகார் அளித்துள்ளார். அதேபோல், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மலர்கொடி – தியாகராஜன் தம்பதி எஸ்.பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தனர். இருவரிடமும், அன்பானந்தன் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி தலா 5 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours