குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த இளைஞர், ஆபாச படம் பார்த்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்க்க வில்லை என்று கூறினார். எல்லாமே புண்ணியம்! கோடீஸ்வரனுக்கும் வராத மனசு! ஏழைகள் மருத்துவமனை செல்ல இலவச ஆட்டோ தந்த கேபிஒய் பாலா இந்த நிலையில் இது தொடர்பாக கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் கிடையாது. ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு எப்படி 90 கிட்ஸ்கள் மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்களோ..
அதே போல இப்போது 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று நீதிபதி தெரிவித்தார். இணையதளத்தில் எளிதில் ஆபாச படம் கிடைப்பதால் இன்றைய தலைமுறையினர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். 10க்கு 9 டீன் ஏஜ் பருவத்தினர் ஆபாச படங்கள் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. ஆபாச படங்கள் பார்ப்பதால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். என்று நீதிபதி கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours