இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Spread the love

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக அலுவலகம் அருகே இன்று குண்டுவெடிப்பு நடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரக அலுவலகத்தின் அருகே இன்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டெல்லி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டெல்லி போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இஸ்ரேல் தூதருக்கான மிரட்டல் கடிதம் ஒன்றையும் டெல்லி போலீஸார் கைப்பற்றி உள்ளனர். தூதரக அலுவலகம் அருகே மாலை 5 மணியளவில் வெடிகுண்டுக்கு நிகரான சத்தம் கேட்டதை, தூதர செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால் வெடித்தது குண்டுதானா என்பதை போலீஸார் மட்டுமே உறுதி செய்ய இயலும் என்றும் அவர் தெரிவித்தார். போலீஸ் விசாரணையின் முதல்கட்டத் தகவல், அளவில் சிறிய குண்டு வெடித்ததை உறுதி செய்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தூதரக அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எவரும் காயமடையவில்லை என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக இந்தியாவின் விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்கவும் இஸ்ரேல் தூதரகம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெல்லி களேபரங்களுக்கு அப்பால், இன்றைய தினம் பெரும் வெடிகுண்டு பீதி மும்பையை அலைக்கழித்துள்ளது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ ஆகிய தனியார் வங்கிகள் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று திடீர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் பெறப்பட்டது. அந்த மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை இடம்பெற்றிருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் சில தனியார் வங்கிகள் உடந்தை என்றும் அந்த மின்னஞ்சல் விவரித்தது. மும்பை மாநகரின் சுமார் 11 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்பதாக வந்த மின்ன்சஞ்சல் தொடர்பாக அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours