வரதட்சணை தர மறுத்ததால் கணவனின் வெறிச்செயல்!

Spread the love

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன், ஆத்திரத்தில் மனைவியின் மூக்கைக் கடித்து துப்பிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை, மகேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நஜீம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அஜ்மி குடும்பத்தார் திருமணத்திற்கு முன், மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையைத் தருவதாக கூறினர்.

ஆனால், அவர்களால் சொன்னபடி வரதட்சணை தரமுடியாமல் போனது. இதனால், மாப்பிள்ளை வீட்டார், திருமணமான நாள் முதல் அஜ்மியை அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு முறை இப்படி பிரச்சினை நடக்கும் போதும், போலீஸாரிடம் கூறுவதற்காக அஜ்மி புறப்பட்டு செல்வாராம். ஆனால், அந்த ஊர் பெரியவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பஞ்சாயத்து நடத்தியே பிரச்சினையை தீர்த்து வைத்து வந்துள்ளனர்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நஜீம், தான் கேட்ட வரதட்சணையை இப்போதே கொண்டு வருமாறு அஜ்மியிடம் கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், கூறிய வரதட்சணையைக் கொடுக்க முடியாத உனக்கு மூக்கு எதற்கு, எனக் கேட்டு, பாய்ந்து சென்று அஜ்மியின் மூக்கை கடித்தார்.

இதில் மூக்கின் நுனியை அவர் கடித்து துப்பினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அஜ்மி, அப்படியே ஓடிச்சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவன் நஜீம் மற்றும் அவரது தந்தை சபீர், குடும்ப உறுப்பினர்களான ரிஹான், ருக்‌ஷார், மஜித் உசைன் மற்றும் சாஹித் அஹமத் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours