12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 6, 2024) வெளியாகின்றன.
இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours