6 நாட்களில் 82,000 மாணவர்கள் சேர்க்கை-பள்ளிக் கல்வித் துறை!

Spread the love

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி சேர்க்கை தொடங்கிய 6 நாட்களில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் ( 2024 – 25 ) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாகவே சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. அத்துடன், அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடங்கிய 6 நாட்களில் ( சனி, ஞாயிறு விடுமுறை தவிர்த்து ) 82,050 மாணவர்கள் பள்ளியில் சேர பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,411 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக சேலத்தில் 7,890 பேரும், கிருஷ்ணகிரியில் 7,770 பேரும் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சம் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் நடப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours