சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 02ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.
16 லட்சத்து 21,224 பேர் தேர்வை எழுதினர். இந்தாண்டு சிபிஎஸ்இ தேர்வுகளில் 87.98 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 0.65 விழுக்காடு அதிகமாகும் அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை மண்டலம் இந்த பட்டியலில் 98.47 விழுக்காடு தேர்ச்சி பெற்று 3 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் 90.68 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு அது மேலும் அதிகரித்து 91.52 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதேபோல் மாணவர்கள் கடந்தாண்டு 84.67 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருந்தனர்.இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 85.12 ஆக உயர்ந்திருக்கிறது.
+ There are no comments
Add yours