
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் நடைபெற்ற 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
மொத்தம் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4 லட்சத்து 22 ஆயிரம் மாணவிகளும், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்களும் அடங்குவர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்தது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் 97.02% தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சியுடன் 3ம் இடம் வகிக்கிறது.
+ There are no comments
Add yours