முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி இடஒதுக்கீடு

Spread the love

கல்லூரி பட்டப்படிப்புகளுக்கு, இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 2024-25 -ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற்பட்ட படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்காக உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடையயலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 -ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற்பட்ட படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்காக உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடையயலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அதற்கான சான்று பெற்றிட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தோ இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெப்சைட் முகவரி https://exwel.tn.gov.in. இ-மெயில் முகவரி: exwelnmk@tn.gov.in ஆகும். மாணவர்களின் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். (தேர்வுத்துறை மதிப்பெண் சான்று சமர்ப்பிக்க இயலாதவர்கள் டவுன்லோடு செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை கொண்டு வரலாம்), பள்ளி மாற்று சான்றிதழ், கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப படிவம் / இணையதள விண்ணப்பம்.

முன்னாள் படைவீரர் / விதவையர் அவர்களின் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்று அசல் (சரிபார்த்தலுக்காக). சார்ந்தோரது பெயர் படைவிலகல் சான்றில் குறிப்பிடப்படாத பட்சத்தில் பார்ட் 1, 2 உத்தரவு நகல் எடுத்து வரவும்.

ஒரு படிப்பிற்காக பெறப்படும் சார்ந்தோர் சான்று அந்த படிப்பிற்கு மட்டுமே பொருந்தும். எனவே ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக சார்ந்தோர் சான்று பெற்று உரிய விண்ணப்பத்துடன் நகல் அனுப்ப வேண்டும், கலந்தாய்வின் போது அசல் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours