ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? இங்கே பாருங்க

Spread the love

ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வரும் ஜூன் 20 முதல் ஜூலை 9ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே உள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் சேர்த்து அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா வசதி உள்ளதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூபாய் 50, சான்றிதழ் மற்றும் இணையதள பதிவுக்கு ரூபாய் 185 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வர்கள் சிறப்பு அனுமதி பிரிவின் கீழ் ரூபாய் 1000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 8 மற்றும் 10ஆம் தேதிகளில் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாதுஎன அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours