தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகளில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. கோடை விடுமுறையை அடுத்து இன்று பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். நடப்பாண்டில் பள்ளிகள் 220 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பள்ளிகளில் புதிதாக திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 1 முதல் 1:20 வரை நூல் வாசிப்பு நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4ம் மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாட வேலைகள் வாசிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய வகுப்பு, வினாடி வினா போன்ற தனித்திறன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours