2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள 94 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தனால் பாதுகாப்பை உறுதி செய்யவும், அனைவரும் சுமூகமாக வாக்களிக்க வேண்டும் என்பதாலும் அந்த மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மே 7 ஆம் தேதி மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மக்களவை தேர்தல் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours