2024 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
83 பாடங்களுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு ஜூன்16ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஜூன் 18ம் தேதி தேர்வு நடைபெறும் என்று யூஜிசி அறிவித்துள்ளது.
பொதுப்பிரிவினர் முதுநிலைப் பட்டப்பிரிவில் 55% மதிப்பெண்களும், மற்றவர்கள் முதுகலைப் பட்டத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும் என்பது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாகும்.
பொதுப்பிரிவினர் முதுநிலைப் பட்டப்பிரிவில் 55% மதிப்பெண்களும், மற்றவர்கள் முதுகலைப் பட்டத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும் என்பது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாகும்.
நெட் தேர்வு , இரண்டு தாள்களை கொண்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும்.
அதன்படி, லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning), பொது அறிவு (Current Affairs) தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இரண்டாவது தாளில், 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கு,குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours