ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் வரும் 28 ஆம் தேதி வரை புத்தாக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த புத்தாக்கப் பயிற்சிகள் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறுகிறது.
இந்த பயிற்சி மூலம் மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிதில் கற்பிக்கும் முறை, ஆங்கில சொற்களை உச்சரிக்கும் முறை போன்றவைகளை ஆசிரியர்கள் அறியும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி பள்ளிகளில் உள்ள உயர் தர கணினி ஆய்வகங்களில் நடத்தப்பட உள்ளது.
+ There are no comments
Add yours