பள்ளி பாடத்திட்டத்தில் மத அடையாளம்? தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம்

Spread the love

தமிழக அரசின் பாடப் புத்தகத்தில் குறிப்பிட்ட மத அடையாளத்துடன் சிறுவர், சிறுமியர் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவது பொய்யான பரப்புரை என மாநில அரசின் உண்மை அறியும் குழு விளக்கமளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் அவ்வையாருக்கும் நெற்றியில் திருநீறை அழித்து நடுநிலையாக்கி, குழந்தைகளுக்கு மத அடையாளம் போட்டு விஷம் விதைக்கும் திராவிட மாடல் என பதிவிட்டிருந்தார்.

அத்துடன் அவர் இணைத்திருந்த பாடப்புத்தகத்தில் தமிழக அரசு பாடநூலில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தை இணைத்து அதில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அடையாளத்துடன் இருக்கும் குழந்தைகள் மட்டும் குறியிட்டு காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் மதநல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்புகைப்படம்
இடம்பெற்றுள்ளதாகவும் அதில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத அடையாளத்துடன் குழந்தைகள் இடம்பெற்றிருப்பர் என்று விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பிட்ட மதங்களை திணிப்பதாகக் கூறுவது வதந்தி என்றும் 2019 பதிப்பில் இருந்தே இந்த படம் இடம்பெற்று வருவதாகவும் திடீரென திணிக்கப்பட்டதாகக் கூறுவது வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours