திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் நகர் ஆகும். அதற்கு காரணம் இங்குள்ள பழமையான, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகும்.
பாளையங்கோட்டை நகரினில் அமைந்துள்ள, பொன்விழா கொண்டாடவுள்ள பள்ளியான குழந்தை இயேசு மகளிர் பள்ளி சமூகத்தால் கைவிடப்பட்ட பலருக்கும் கல்வி கொடுத்து சமுதாயத்தில் அவர்கள் உயரிய நிலைக்குச் செல்ல காரணமாக உள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவி பிரியதர்ஷினி கூறுகையில், “நான் முனைவர் பிரியதர்ஷினி, உதவி பேராசிரியராக வணிகவியல் துறையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். நான் பெருமையுடன் கூறுவேன் நான் குழந்தை இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி என்று. 2006ஆம் ஆண்டு என்னுடைய பத்தாம் வகுப்பை நான் இந்த பள்ளியில் முடித்தேன்” என்றார்.
அனைத்து மாணவிகளுக்கும் எந்தவிதமான ஜாதி மத இன வேறுபாடு இன்றி தியானம், மனதை அமைதிப்படுத்தி ஒருமுறைப்படுத்தி எவ்வாறு நாம் நடக்க வேண்டும் என்பதை ஒரு பிரார்த்தனையாகவே நடத்தி வருகிறது. இந்தப் பள்ளி தன்னுடைய வெள்ளி விழாவை கொண்டாடிய போது அப்போதைய மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெனிஃபர் சந்திரன் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்தார்கள்.
+ There are no comments
Add yours