தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது.
1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்ததுள்ளது.
பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ஆம் தேதி மக்களை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனால், பள்ளி திறப்பு ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிபோகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்தால். இதனால், ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், வெயில் தணிந்து தற்போது மழை பெய்து வருகிறது. மேலும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகுகிறது. எனவே, ஜூன் 4ஆம் தேதிக்கு அடுத்த நாள் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். இருப்பினும் வரும் 27ஆம் தேதி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பள்ளி திறப்பு முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என்றனர்.
+ There are no comments
Add yours