நீட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 16 தேதி வரை நீட்டிப்பு!

Spread the love

மருத்துவ உயர்கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று இரவுடன் முடிவடைந்தநிலையில்அதற்கான காவ அவகாசம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவராகும் கனவுடன் இருக்கும் மாணவ மாணவியருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக ’நீட்’ விளங்குகிறதுஇந்த வருடத்தின் நீட் நுழைவுத்தேர்வு மே 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுஇதற்கு ஆன்லைன்வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாளாக மே 09 அறிவிக்கப்பட்டிருந்ததுஅன்றைய தினம் இரவு 11.50 மணிக்குள்விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி 3 தினங்களாக ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க குவிந்ததில் சர்வர்கள் திணறஆரம்பித்தனநீட் நுழைவுத்தேர்வுக்கான நடைமுறைகள் நீண்டது என்பதாலும்பலமுறை ஓடிபி அடிப்படையில்விண்ணப்ப நடைமுறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லக்கூடியது என்பதாலும் சர்வர் கோளாறு பெரிதும்சோதித்தது.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்நேற்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கும் முயற்சியில்ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்இவை தொடர்பான பெற்றோர்களின் குமுறல்கள் சமூகஊடகங்களில் வெடித்ததுநீட் நுழைவுத் தேர்வுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைஎழுந்தது.

இதனையடுத்து நீட் நுழைவுத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமைகால அவகாசத்தை மார்ச் 16 தேதிக்குநீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதுமார்ச் 16 அன்று இரவு 10.50 வரை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுமேற்கொள்ளலாம் என்றும், 11.50 வரை கட்டண நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours