மத்திய அரசின் தேர்வு ஆணையம் 960 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer (Civil, Mechanical & Electrical) Examination) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff selection commission) வெளியிட்டது.
இந்த ஆட்சேர்க்கையின் மூலம் 960க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 18-04-2024 (நள்ளிரவு 11 மணி வரை) ஆகும்.
இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01-08-2024 அன்று 30க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
இந்தப் பணிக்கு கல்வித் தகுதி டிப்ளமோ, பொறியியல் ஆகும்.
+ There are no comments
Add yours