ஐ.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Spread the love

IIT Madras ஆனது சீனியர் டிசைன் இன்ஜினியர் (Senior Design Engineer), பிரின்சிபால் இன்ஜினியர் (Principal Engineer), கன்சல்டன்ட் (Consultant), லீட் இன்ஜினியர் / டெக்னிக்கல் லீட் (Lead Engineer/Technical Lead) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Design Engineer, Principal Engineer, Consultant, Lead Engineer/Technical Lead பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree / Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Senior Design Engineer – ரூ.75,000/-
Principal Engineer – ரூ.2,00,000/-
Consultant – ரூ.2,00,000/-
Lead Engineer/Technical Lead – ரூ.1,00,000/-
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours