ரூ.35 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு வேலை வாய்ப்பு: முழு விவரம்

Spread the love

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி வருகிறது.தற்போது, மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஜூனியர் என்ஜினியர் (JUNIOR ENGINEER)நிரப்பப்படும் பிரிவுகள்- CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & contracts

காலியிடங்களின் எண்ணிக்கை: 968

கல்வித் தகுதி : CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 35,400-1,12,400தேர்வு செய்யப்படும் முறைமுதல் கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும்.

இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவது கணினி வழித் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_28032024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours