சட்டப்பணி குழுவில் பணி; தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Spread the love

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிக பணிபுரிய நேர்முக தேர்வு நடக்கவுள்ளது.

இந்த தேர்வில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் விண்ணப்பிக்கலாம்.

அவர்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதியும் வரை), அரசு சாரா அமைப்பை சேர்ந்தோர், அரசியல் அல்லாத உறுப்பினர்கள், சுற்றுப்புற குழுக்களின் பெண் உறுப்பினர்கள், சுயஉதவி குழுக்களைச் சேர்ந்தோர், ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கக்கூடிய குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் சட்ட தன்னார்வலர்களாக தகுதியுடையவர் ஆவர்கள்.

சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பிப்போர், தங்களின் பெயர், முகவரி, படிப்பு மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை தனித்தாளில் எழுதி (அரசால் வழங்கிய தேவையான இணைப்புகளோடு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களில் சுய கையெழுத்திட்ட நகல்களோடு) தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம்என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ dlsavillupuram@gmail.com அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் 15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours