அணுகுண்டு சோதனை நடத்திய ரஷ்யா! திடீர் முடிவால் பரபரப்பு…அடுத்தது என்ன?

Spread the love

உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம் செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தற்போது, அந்த ஒப்பந்தத்தின் ஒப்புதலை திரும்பப் பெறும் சட்டத்தை நேற்று ரஷ்ய பாராளுமன்றம் நிறைவேற்றியது. இதனையடுத்து, திடீரென நிலம், கடல், வானிலிருந்து தாக்க கூடிய வகையில் அணு குண்டு சோதனையை நடத்தியுள்ளது ரஷ்யா அரசு. மேலும், இந்த சோதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை, உக்ரைன் – ரஷ்யாவின் போருக்கு மத்தியில் மாஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளது. ரஷ்யா நாட்டிற்கு எதிராக பெரிய தாக்குதல் நடந்தால், தயாராக இருக்கும் வகையில் இந்த சோதனை செய்துள்ளதாக ரஷ்ய அமைச்சர் சொர்கை ஷோகுய் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கையின் படி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள சோதனை தளத்தில் இருந்தும், மற்றொரு ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும் ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சோதனையின் காட்சிகளையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைக் காட்டுகிறது. ஆனால், உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கிரெம்ளின் திட்டமிட்டுள்ளதாக எந்த அறிக்கைகளும் தகவல்களும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாலஸ்தீனம் – இஸ்ரேல் போரும் உச்சத்தில் உள்ளது. இதில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த அணு ஆயுத சோதனை கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours