இரண்டாவது ஆண்டாக சரியும் மக்கள் தொகை!

Spread the love

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக சரிந்துள்ளது. குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்த வந்த சீனா, 2022ஆம் ஆண்டுக்கு கொரோனாவுக்கு பிறகு 8,50,000 மக்களை இழந்தது. இதனால் 1960ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை கணிசமான அளவில் குறைந்தது. அதேபோல 1980 முதல் 2015 வரை சீனாவில் அமலில் இருந்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் 2016 -ம் ஆண்டிலேயே “ஒரு குழந்தை கொள்கையை” சீன அரசு தளர்த்திக் கொண்டதோடு, கடந்த ஆண்டு முதல் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் சமீபமான இரண்டு வருடங்களில் குறைந்து உள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த சீனாவின் மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி 16 முதல் 59 வயதுக்கு உடபட்ட தொழிலாளர்கள் 10.75 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் கணிப்பின்படி சீனா இந்த ஆண்டு பொருளாதாரத்தில் 5.2℅ உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் , கணித்த அளவு உயர்வு இல்லை. இது, கடந்த 30 வருடங்களில் சந்திக்காத பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இதற்கு பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ல் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 6,90,000 ஆக அதிகரித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான். ஆனால் தற்போது மக்கள்தொகை சரிவை சந்திப்பதால் சீன அரசு கலக்கத்தில் உள்ளது. மேலும், சீனாவின் மாநில அரசுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours