ஐநா நடத்தக்கூடிய பள்ளிக்கூடத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் !

Spread the love

காசாவில் ஐநா அமைப்பு நடத்தி வந்த பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. நேற்று முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், ‘இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பிணைக்கைதிகளின் விடுதலை என்பது 24-ம் தேதிக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வடக்கு காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வந்த பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேலிய ராணுவ படை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் வடக்கு காசா பகுதியில் உள்ள இந்தோனேஷியன் மருத்துவமனை மீதும் இஸ்ரேலிய ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours