காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்! 70 பேர் உயிரிழப்பு?

Spread the love

நேற்று இரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 70 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து 17-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தான்.

தற்போது, காசா பகுதியில் வசிக்கும் மக்கள், உணவு தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன், எகிப்தின் ராஃபா எல்லை வழியாக பெரிய ட்ரக்குகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் காசாவுக்குள் நுழைந்தது. மேலும், 17 லாரிகளில் குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் காசாவுக்கு சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவம் 320 ஹமாஸ் தளங்களை குறிவைத்து வான் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவில் நேற்று இரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இன்று 70 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ்தெரிவித்துள்ளது. இதில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் ஒரு வீட்டைத் தாக்கியபோது, உள்ளே இருந் 17 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 மக்கள் காயமடைந்து உள்ளனர். இதற்கிடையில் இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,688 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் அறிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours