ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

Spread the love

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது.

இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக கூகுள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ சாட் பாட்டுகளை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றன. கூகுள் கடந்த மார்ச் மாதம் ‘பார்ட்’ எனும் ஏஐ சாட் பாட்டை அறிமுகம் செய்தது. இதனையடுத்து சில கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது

பிறகு இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்ட் ஏஐ அறிமுகமானது. சார்ஜ் சாட் ஜிபிடிக்கும் பார்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சாட் ஜிபிடி 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களை மட்டுமே ஆய்வு செய்து தரக்கூடியது ஆகும். ஆனால் பார்ட் தற்போது இருக்கக்கூடிய தகவல்கள் வரை கூகுளில் தேடி தரக்கூடியது.

இந்த பார்ட்-ஐ அறிமுகம் செய்ததோடு கூகுள் நிறுவனம் விடாமல், அதன் முன்னணி ஏஐ நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி எனப்படும் புதிய ஏஐ-ஐ உருவாக்கியுள்ளது. இதனால் ஜெமினி பல வகையான தரவுகளை கையாள முடியும். ஓவியங்கள், உரைகள், படங்கள் போன்றவற்றை புரிந்துகொள்ளும் மற்றும் உருவாக்கும் திறன் கொண்ட இதில், மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய ஏஐ அமைப்பு (AlphaGo) உள்ளது.

முதன்முதலில் இந்த ஜெமினி ஏஐ ஆனது கடந்த மே மாதம் நடந்த கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் வெளியானது. இதன்பிறகு இந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படி, வெளியீட்டு நிகழ்வானது நியூயார்க் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஜெமினி ஏஐ வெளியீடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெமினி 1.0-வின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த ஜெமினி ஏஐ-ல் ஆங்கிலம் இல்லாமல் உள்ளிடப்படும் தகவல்களுக்கு நம்பகமான தகவலை தருவதில் பிரச்சனைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஜெமினி ஏஐ வெளியிடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெமினி ஏஐ-ன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என பார்ப்பதற்கு இத்தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours