பாஸ்போர்ட் அச்சிட முடியாமல் பொருளாதார சரிவில் பாகிஸ்தான்!

Spread the love

லேமினேஷன் பேப்பரின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் லட்சக்கணக்கானோர் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவிக்கின்றனர், இதனால் பலரின் வெளிநாட்டுக் கனவு வீணாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதற்காக வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் வரியை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் வரையில் பல செலவுகளைக் குறைத்துள்ளது அந்நாட்டு அரசு.

ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவிக்காகப் பாகிஸ்தான் எடுத்த பல நடவடிக்கைகள் தற்போது அந்நாட்டு மக்களுக்குப் பாஸ்போர்ட் எடுக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானிய குடிமக்கள் தற்போது புதிதாகப் பாஸ்போர்ட் எடுப்பதில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லேமினேஷன் பேப்பரின் பற்றாக்குறையால் அந்நாட்டில் பெரும் சிக்கல் வெடித்துள்ளது. லேமினேஷன் பேப்பரின் பற்றாக்குறை காரணமாக லட்சக்கணக்கானோர் பாஸ்போர்ட் பெற முடியாமல் உள்ளனர். இதனால் பலரின் வெளிநாட்டுக் கனவு வீணாகி வருகிறது என அந்நாட்டு மக்கள் புலம்பித் தள்ளி வருகின்றனர்.

குறிப்பாகப் படிப்பு, வேலை அல்லது ஓய்வுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் குடிமக்களின் நிலைமை ஆபத்தில் உள்ளது இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிக்கையான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்ட செய்தியில் பாகிஸ்தானில் உள்ள குஜராத்தில் வசிக்கும் ஜெய்ன் இஜாஸ், இங்கிலாந்தில் படிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் இருந்தார். அவர் இறுதியாக இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் பெற்றார். ஆனால், அவரது பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அவரது கனவுகளைச் சிதைத்துவிடும் என்ற சோகத்தில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours