1,200 அடி பயணிகள் கப்பல் !

Spread the love

உலகின் மிக நீண்ட பயணிகள் கப்பல் ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ நேற்று மியாமி துறைமுகத்தில் இருந்து தன் முதல் பயணத்தை தொடங்கியது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த புகழ் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனம் ராயல் கரீபியன். இந்நிறுவனம் 1,200 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீண்ட பயணிகள் சொகுசு கப்பலை உருவாக்கி உள்ளது.

20 தளங்களை கொண்ட இந்த கப்பலில் சுற்றுலா பயணிகளுக்கான அதிநவீன தங்கும் அறைகள், 6 நீர்சறுக்கு விளையாட்டுகள், ஒரு பனிசறுக்கு மைதானம், 7 நீச்சல் குளங்கள், ஒரு திரையரங்கம், 40 நவீன உணவகங்கள், பார்கள் இடம்பெற்றுள்ளன.

2,350 பணியாளர்களுடன் அதிகபட்சமாக 7,600 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி மற்றும் அவரது இன்டர் மியாமி அணியினர் ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து ராயல் கரீபியன் குழும தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேசன் லிபர்டி “ஐகான் ஆஃப் தி சீஸ் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கனவுகள், புதுமைகள் மற்றும் முயற்சிகளின் வௌிப்பாடு. உலகின் சிறந்த விடுமுறை அனுபவங்களை பயணிகளுக்கு வழங்கும் எங்கள் பொறுப்பின் உச்சம்” என்று கூறியுள்ளார்.

தென்ஃப்ளோரிடாவின் மியாமி துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ வெப்ப மண்டலங்களை சுற்றி 7 நாட்கள் பயணம் செய்ய உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours