5ஜியை அடுத்து பாயும் 6ஜி! சென்னையில் ஸ்பெஷல் டீமை இறக்கிய எரிக்சன்!

Spread the love

5ஜி சேவையே இப்போது தான் மெல்ல நமது நாட்டில் விரிவடைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட பாய்ச்சலாக நாம் இப்போது 6ஜி சேவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெலிகாம் சந்தை மிக பெரிய மார்கெட்டாக இருக்கிறது. இப்போது கிட்டதட்ட நாடு முழுக்க 4ஜி சேவை வந்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த கட்டமாக 5ஜி இப்போது ஆரம்பிக்கிறது.

கடந்தாண்டு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மெல்ல 5ஜி சேவையை ஆரம்பித்துள்ளது. இப்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கு 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அது மெல்ல விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அடுத்துப் பாயும் 6ஜி: 5ஜி சேவையே இப்போது தான் தட்டுத்தடுமாறி நடக்கும் குழந்தை போலச் சேவையை ஆரம்பித்துள்ள நிலையில், இப்போது நமது நாட்டில் 6ஜி டெஸ்டிங்கை தொடங்குகிறது. அதுவும் நமது சென்னையில் தான் இந்த 6ஜி சோதனை ஆரம்பிக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். டெலிகாம் கருவிகளைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம் தனது ‘இந்தியா 6ஜி’ திட்டத்தை ஆரம்பிக்கிறது.அதன்படி எரிக்சன் நிறுவனம் தனது சென்னை ஆர்&டி மையத்தில் இந்தியா 6ஜி ஆய்வுக் குழுவை உருவாக்கியுள்ளது. எரிக்சன் இந்தியாவில் சென்னை, பெங்களூர் மற்றும் குருகிராம் என்று மூன்று ஆர்&டி மையங்களைக் கொண்டு இருக்கிறது. ரேடியோ, நெட்வொர்க்குகள், ஏஐ மற்றும் கிளவுட் என பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு இந்த ‘இந்தியா 6ஜி’ டீமை எரிக்சன் நிறுவனம் அமைத்துள்ளது.

எதற்குப் பயன்படும்: தானியங்கி முறையில் வாகனங்களை இயக்குவது, அதிநவீன கேமிங் ஆகியவற்றை 5ஜி மூலம் செய்ய முடியும். 6ஜி தொழில்நுட்பம் அதையே தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கும். 6ஜி தொழில்நுட்பம் மூலம் நம்மால் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களை நேரடியாக இணைக்க முடியும். 6G நெட்வொர்க் மூலம் நமக்குத் தடையற்ற அதிவேக தொடர்பு கிடைக்கும் நிலையில், இதன் மூலம் நமது ரியல் உலகையும் டிஜிட்டல் உலகையும் நம்மால் இணைக்க முடியும். இது தொடர்பாக எரிக்சன் இந்தியாவின் தலைவர் நிதின் பன்சால் பேசுகையில், “நிலையான இணைப்பு, எளிமையான நெட்வொர்க்குகள், அதிவேக இணையச் சேவை ஆகியவை தான் எங்கள் பாரத் 6Gஇன் நோக்கமாகும்.

இந்தியா ஆய்வாளர்கள் சர்வதேச டீம் உடன் இணைந்த 6ஜி குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து “இந்தியா 6G” சகாப்தத்தை உருவாக்கத் தயாராக உள்ளோம். 5ஜி இருந்தும் என்ன பயன்.. மொபைல் நெட் மெதுவாக இருக்கா.. இதை செய்யுங்க ஜெட் வேகத்தில் பாயும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாங்கள் 5Gஇல் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.. 6ஜி முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் வரை ஆகும். அதற்கான ஆய்வுகளை நாங்கள் தொடங்குகிறோம்.. ஒரு நாடாக நாம் சர்வதேச அரங்கில் முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் ஆய்வுகளை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

பாய்ச்சல்: ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் உள்ள எரிக்சன் ஆய்வுக் குழு இணைந்து இந்த 6ஜி சோதனையை ஆரம்பிக்கும். இந்த 6ஜி இணையத்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும். இதன் மூலம் டிஜிட்டல் உலகும் வேற லெவல் பாய்ச்சலுக்கு ரெடியாகும். இந்தாண்டு இறுதியில் சர்வதேச அளவில் 5ஜி யூசர்களின் எண்ணிக்கை 167 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4ஜி பயனாளர்களுடன் ஒப்பிடும்போது, ​​5G பயனர்கள் விஆர் கேமிங் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) போன்ற மெட்டாவர்ஸில் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகம் செலவிடுகிறார்களாம். 6ஜி வந்தால் இது மேலும் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்றே எரிக்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours