இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை நீட்டித்துள்ளது.
வழக்கமாக டெல் அவிவ் நகருக்கு ஐந்து வார திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கும் முழு சேவை, முன்னதாக அக்டோபர் 14 வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, இந்த இடைநிறுத்தம் இம்மாதம் 18ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவைகளைப் பொறுத்து இந்தியர்களை திரும்ப அழைத்து வர, பட்டய விமானங்களை இயக்கும் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுவாக, ஏர் இந்தியா விமானங்கள் இஸ்ரேலுக்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக அரசாங்கம் தொடங்கியுள்ள ஆபரேஷன் அஜய்யின் கீழ், விமான நிறுவனம் இதுவரை இரண்டு விமானங்களை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours