வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், இரண்டு நாள் பயணமாகி சிறப்பு கவச ரயிலில் மூலம் ரஷ்யா சென்றடைந்தார். அவரது தனிப்பட்ட இந்த ரெயிலில் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் இருந்தனர். ஏன் விமானம் மூலம் செல்லவில்லை என்று பார்க்கையில், இது அவர்களது பாரம்பரியம் என்று கூறப்படுகிறது.
கிம்மின் தனிப்பட்ட ரயில் நேற்று அதிகாலை ரஷ்யா-வட கொரியா எல்லையில் உள்ள காசானில் நிறுத்தப்பட்டது. அங்கு இராணுவ மரியாதையுடன் அந்நாட்டு அரசாங்கத்தால் சிவப்பு கம்பளத்தில் வடகொரியா அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ரயிலானது நவீன ஆயுதங்கள், செயற்கைக்கோளுடன் தொடர்பில் இருக்கும் கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. நேற்றைய தினம், ரஷ்ய அமைச்சர்களை சந்தித்து பேசிய வடகொரியா அதிபர், இன்று ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் புதினை சந்தித்து இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கினார்கள். இந்த சந்திப்பின் போது, முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours