இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல்-மசினி என்பவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது, அந்த வகையில், தாக்குதல் நடைபெற்று வரும் கடந்த ஒரு வார காலத்தில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் இருக்கும் இடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்பொழுது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர் ஹமாஸ் அமைப்பின் வசத்தில் பிடிபட்டிருந்த பணய கைதிகளை கையாளுவதிலும், பயங்கரவாத செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். முன்னதாக, ஹமாஸ் பொது உளவுத்துறையின் தலைவர் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலின் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours