சந்திரயான் – 3 குழுவினருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

Spread the love

இந்தியாவின் சந்திரயான்- 3 குழுவுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அது திட்டமிட்டபடி பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ஆக.1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திராயன் 3 பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. ஆக.17-ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வந்தது. அதில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 23- ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்தது.

சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடந்தது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான் 3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஜான் எல்.’ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது நேற்று வழங்கப்பட்டது.

அந்த விருதை ‘இஸ்ரோ’ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours