ஆரோக்கியமான நார்த்தை இலை துவையல் !

Spread the love

நார்த்தங்காய் மட்டுமல்ல அதன் இலை கூட மருத்துவ குணம் நிறைந்தது. நார்த்தங்காய் இலை உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகளை குணமாகும். இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள்

இளம் நார்த்தை இலை- 20

காய்ந்த மிளகாய்- 4

தேங்காய்- 1 கப்

புளி- எலுமிச்சை அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை

இளம் நார்த்தை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை அகற்றி விட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. எப்போதும் போல் கடுகு, கடலைப் பருப்பு தாளித்து சேர்க்கலாம் இன்னும் சுவையான இருக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours