ஒரு முறை இப்படி தக்காளி தொக்கு செய்து பாருங்க. 6 மாதவரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள்
1 கிலோ தக்காளி
1 கப் எண்ணெய்
50 கிராம் புளி
1 டீஸ்பூன் வெந்தயம்
1 டீஸ்பூன் கடுகு
உப்பு தேவையான அளவு
1 கப் நல்லெண்ணை
1 டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் பெருங்காயம்
3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
வெல்லம் சிறிய அளவு
செய்முறை : தக்காளியை நன்றாக கழுவ வேண்டும். அதன் அடிப்பகுதியை மட்டும் வெட்டிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தக்காளியில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இருக்க கூடாது. நன்றாக துடைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் 1 கப் எண்ணெய் சேர்த்து சூடானதும், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளியின் தோல் சுருங்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து புளியை சேர்த்து வதக்கவும். குழைவாக வந்ததும், அதை எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெந்தயம், கடுகை சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து மிக்ஸியில் புளி மற்றும் உப்பை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து அரைத்துகொள்ளவும். இனியொரு மிக்ஸியில் கடுகு, வெந்தயத்தை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்த்து, கடுகு சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து கடுகு, வெந்தயம் பொடித்ததை சேர்த்து கிளரவும். பெருங்காயம் சேர்த்து கிளரவும். மிளகாய் தூள் சேர்த்து கிளரவும். வெல்லம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.
+ There are no comments
Add yours