கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர் பகுதிகளுக்கு 450 அரசு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, மேலாண் இயக்குநர் த.அ.போ. கழகம்(விழுப்புரம்)லிட்., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வார இறுதி நாட்களான 26.04.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27.04.2024 (சனிக்கிழமை) மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 200, சனிக்கிழமை 250, மொத்தம் 450 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
+ There are no comments
Add yours