உடலுக்கு பலம் கூட்டும் முருங்கைகாய் தேங்காய்பால் குழம்பு; இப்படி செய்து அசத்துங்க!

Spread the love

சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நறுக்கிய முருங்கைக்காய்- 3

பெரிய வெங்காயம்- 1

தக்காளி (பெரியது)- 1

பச்சை மிளகாய்- 3

பூண்டு பல்- 3

மிளகாய் தூள்- ஒன்றரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

கட்டியான தேங்காய் பால் – அரை கப்

தாளிக்க :

எண்ணெய் – தேவைக்கேற்ப

கடுகு- ஒரு டீஸ்பூன்

உளுந்து – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து வைத்து சிறு தீயில் வேகவிடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

இப்போது சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.

முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பினை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours