கோடைகாலம் வந்தாலே பலரும் விடுமுறைக்காக காத்திருக்கும் நிலையில், ஒருசில பருவகால நோய்களும் வரிசைகட்டி நிற்பது பலரையும் கவலையடைய செய்கிறது.
கோடைகாலத்தில் அதிகரிக்கும் முக்கிய பிரச்சனையாக கன்ஜங்டிவிடிஸ் (Conjunctivitis) என்ற கண் பிரச்சனை இருக்கிறது.
இந்த நிலை ஏற்படுவதற்கான காரணங்களை புரிந்து கொள்வது, அறிகுறிகளை தெரிந்து கொள்வது மற்றும் சிகிச்சை விருப்பங்களை தெரிந்து கொள்வது இதனை நிர்வகிக்க முக்கியமானதாகும்.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், அலர்ஜி மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கோடைகாலத்தில் Conjunctivitis நிலை ஏற்படும் வாய்ப்பு தூண்டப்படலாம்.
இதனால் கன்ஜங்டிவிடிஸ் பாதிப்புகள் அதிகரிக்கிறது. குறிப்பாக வெளிப்புற நடவடிக்கைகள் வைரஸ்கள் மற்றும் Conjunctivitis பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்க செய்கின்றன.
அறிகுறிகள் என்ன?
ஒரு கண் அல்லது 2 கண்களும் சிவந்து போவது
கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல்
கண்களில் உறுத்துவது போன்ற உணர்வு
கண்களில் இருந்து இரவு வெளியேறும் அழுக்கு போன்ற பொருள், இது காலை தூங்கி எழுந்ததும் கண்களை விழிக்க முடியாமல் செய்யலாம்.
கண்களில் இருந்து அதிகப்படியாக நீர் வெளியேறுவது.
தடுப்பு நடவடிக்கைகள்
கண்களை தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்கவும்.
கைகளை அடிக்கடி நன்கு கழுவவும்
தலையணை உறைகள் மற்றும் டவல்களை தவறாமல் மாற்றவும், இந்த பொருட்களை பிறருடன் பகிர வேண்டாம்.
நீச்சல் குளங்களுக்கு சென்று தண்ணீரில் இறங்கும் போது நீச்சல் கண்ணாடிகளை மறக்காமல் அணியுங்கள் மற்றும் உங்களுக்கு தொற்று ஏற்பட்டால் தண்ணீரில் இறங்கி நீந்துவதை தவிர்க்கவும்.
+ There are no comments
Add yours