மலச்சிக்கல் பிரச்சனையா? டெய்லி இரண்டு அத்திப்பழம்: அப்புறம் பாருங்க!

Spread the love

பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பழங்கள் பல நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. அதிலும் அத்திப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல சத்துக்களை உள்ளடக்கிய அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீர்க்கக்கூடிய நோய்கள் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

அத்தி விதைத்தூளில் நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும்.

அத்திப் பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.

உலர் அத்திக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நோயுற்ற கல்லீரல் சீரடையும்.

தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

அத்திக்காயை உண்ண உதட்டில் வெடிப்புகள் இருந்தால் தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.

சிறுநீர் கல் உள்ளவர்கள் அத்திப் பழத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் எந்தவகையிலும் அத்தியை பயன்படுத்தக் கூடாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours